உலகம்

உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகள் ; அமெரிக்கா அதிரடி ஒப்புதல்

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில் 500 பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், ‘பேட்ரியாட் பி.ஏ.சி-3’ (Patriot PAC-3) வகையைச் சேர்ந்த இடைமறிப்பு ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளன.

அமெரிக்காவின் பிரபல ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) இந்த ஏவுகணைகளைத் தயாரிக்கிறது.

ரஷ்யா தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வான் பாதுகாப்பை மேம்படுத்த உக்ரைன் இந்த ஏவுகணைகளைப் பெற ஆர்வம் காட்டி வருகிறது.

அமெரிக்காவின் முடிவை வரவேற்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, குறித்த ஏவுகணைகள் கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு நீண்டகால விநியோக ஒப்பந்தங்களை விட உடனடியாக ஏவுகணைகள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *