பலதும் பத்தும்

மயோன் எரிமலை வெடித்து சிதறியது – 3000 மீற்றர் உயரத்திற்கு எழுந்த சாம்பல் புகை

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை நேற்று முதல் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

சாம்பல் புகை 3,000 மீற்றர் உயரத்திற்கு எழுந்ததாகவும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயோன் எரிமலையைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

இருப்பினும் எச்சரிக்கை அளவு 0-5 அளவுகோலில் 2-லிருந்து 3-ஆக உயர்த்தியுள்ளதுடன், எரிமலைப் பள்ளத்திலிருந்து 6 கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் இருக்கும் மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *