இலங்கை

குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவே கூடாது

“இந்நாட்டில் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக்கூடாது. இது மகா சங்கத்தினருக்கும் பொருந்தும்” என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“இராணுவம் மற்றும் மதம் குறித்து தற்போது பேசப்படுகின்றது. நான் உட்பட 35 பேர் பழிவாங்கப்பட்டோம். இதனை நாம் மறக்கவில்லை.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று கூக்குரல் எழுப்புகின்றனர். படையினர் பழிவாங்கப்படுவதாகக் கூறி கோஷங்களும் எழுப்பப்படுகின்றன.

யார் தவறிழைத்திருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. சுரேஷ் சலேவுக்கெனத் தனியான சட்டம் இருக்க முடியாது. தவறிழைத்திருந்தால், சட்டரீதியான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். இது மகா சங்கத்தினருக்கும் பொருந்தும்.

விகாரமகாதேவி பூங்காவில் தற்போது தேரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே, தவறிழைத்திருந்தால் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். தனிநபர் ஒருவருக்காகச் சட்டங்களை மாற்றக்கூடாது” என்றார் சரத் பொன்சேகா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *