இலங்கை

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்/எம்.எல்.ஏ.-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தீர்ப்பை அறிவிப்பதற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அவரது ஆதரவாளர்கள் அந்தத் தீர்ப்பை வரவேற்றதுடன், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

இந்த வழக்கைப் பதிவு செய்தவர், சுல்தான்பூரின் கோட்வாலி தேஹாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹனுமன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவரும், சுல்தான்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா ஆவார்.

2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில், அம்த் ஷா குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, மிஷ்ரா 2018 ஆகஸ்ட் மாதத்தில் இந்த வழக்கை பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *