உலகம்

பிரான்ஸில் பல வாரங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு தீர்வு

பிரான்ஸில் பல வாரங்களாக நீடித்து வரும்  போராட்டங்களுக்குத் தீர்வாக, தனது அரசாங்கம் சில புதிய நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

அதே வேளையில், ரும் நாட்களில் மேலும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மார்சேய் நகரில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய  மக்ரோன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு, உயர்நிலைப் பாடசாலை மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறைக்கு கூடுதல் வளங்கள் தேவை என்றும், பல்கலைக்கழக சேர்க்கை முறையில் உள்ள சமத்துவமின்மையை நீக்க அந்த முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *