இலங்கை

மயிலத்தமடு, மாதவனைப் பிரச்சினை; ஜனாதிபதியின் உத்தரவை புறக்கணிப்பது யார்?

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினையில் மேய்ச்சல் தரைக்காக 3000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆனால் ஜனாதிபதியின் அறிவிப்பு இதுவரை காலமும் ஏன் அமுல்படுத்தாமல் உள்ளது என்பது பிரச்சினைக்குரியது.எனவே இப்பிரச்சினை இன முரண்பாடாக தீவிரமடைவதற்கு முன்னர் ஜனாதிபதியின் அறிவிப்பை செயற்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகின்றோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் பேசுகையில்,

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒருசில இனவாதிகள் கூட்டம் இந்த பிரச்சினையை இனவாத முரண்பாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றது. அதற்கு நிதி ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மே மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த போது மயிலத்தமடு மாவதனை மேய்ச்சல் தரை பிரச்சினை பற்றி பேசப்பட்டது.இதன்போது மேய்ச்சல் தரைக்காக 3000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதியின் அறிவிப்பு இதுவரை காலமும் ஏன் அமுல்படுத்தாமல் உள்ளது என்பது பிரச்சினைக்குரியது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம் ,வனவளத்துறை திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை இனமுரண்பாடாக தீவிரமடைவதற்கு முன்னர் ஜனாதிபதியின் அறிவிப்பை செயற்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறோம். இனவாத தரப்பு இந்த விடயத்தை இன முரண்பாடாக மாற்ற முயற்சிக்கிறது. முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர் அதற்கு தீர்வு காண்பதை விட முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *