இலங்கை

20 பேருக்குரிய சிறைக் கூடங்களில் 300 பேர்!; தடுத்து வைப்பு என்கிறார் நாமல்

சிறைச்சாலைகள் நரகம் போலவே காணப்படுகின்றது. 20 பேர் இருக்க வேண்டிய சிறைக்கூடங்களில 300 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மலசலக்கூட வசதிகளும் இல்லாமல் இருக்கின்றது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது நாமல் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளின் நிலமை இப்போது நரகம் போலவே உள்ளது. 20 பேர் இருக்க வேண்டிய அறைகளில் 300 பேர் வரையில் வைக்கப்பட்டுள்ளனர். மலசலகூட வசதிகள் இல்லை. கடும் நெருக்கடி நிலவுகின்றது. அது தொடர்பில் தேடிப்பார்ப்பதும் கிடையாது.

இதேவேளை சிறைச்சாலை அதிகாரிகளின் நிலமையும் மோசமாக இருக்கின்றது. சிறைச்சாலைகளில் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. அதிகாரிகளுக்கு போதுமான கொடுப்பனவு, விடுமுறை வசதிகளும் இல்லாமல் இருக்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *