இலங்கை

சண்டித்தனம் செய்யும் சாதுக்கள் – புத்தரின் போதனை இதுதானா..! கடுமையாக சாடிய ஸ்ரீநேசன்

இனவாதம் மற்றும் மதவாதத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்குப் பதிலாக, நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

புத்தரின் போதனைகள் அமைதியையும் அன்பையும் வலியுறுத்துகின்ற நிலையில், சில பிக்குகளின் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளது.

மேலும், அரசியல்வாதிகள் தங்களின் கடந்தகாலத் தவறுகளை மறைப்பதற்கும் அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கும் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துகின்றனர்.

அதேவேளை, ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்ற அவர், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மதத் தலைவர்கள் உட்பட எவராக இருந்தாலும் சட்டத்தை மீறினால் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த அவர், கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பாதிப்புகளுக்குச் சட்டரீதியான தீர்வுகள் காணப்பட வேண்டும்.

அத்துடன், மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *