இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார பிடிவாதம் – முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் அரசை விரட்டும் பாரிய போராட்டம்! கஸ்ஸப பிக்குவின் ஆவேச பேச்சு

ஞானசார பிக்குவின் பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதி பிடிவாதம் – முரட்டுத்தனமாக நடந்துகொண்டால், சட்டப்பூர்வமாக தேரரை மீட்டெடுக்க வேறு வழியில்லை என்றால், வேறு ஒரு ஜனாதிபதியை நியமித்தேனும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வோம் என பலாங்கொடை கஸ்ஸப பிக்கு விகாரமாதேவி பூங்காவில் இருந்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடைபெறும் விகாரமாதேவி பூங்காக்கு வந்த பின்னர் நடத்திய உரையாடலின் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்துரையாற்றிய அவர்

கஸ்ஸப பிக்குவின் அடுத்த கட்ட திட்டம்

நாங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என்னவென்றால் நாங்கள் வந்தது உங்களது ஜனாதிபதி பதவியைப் பறிப்பதற்கோ, அமைச்சரவையைக் கலைப்பதற்கோ அல்ல.

எங்களுக்கு அரசாங்கங்களைக் கவிழ்க்கத் தேவையில்லை. நாங்கள் ஏன் அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும்? தற்போதைய அரசாங்கம் புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

ஞானசார தேரரை விடுவிக்கும் பொறுப்பு, அரசியலமைப்பின் 9வது சரத்துடன் 34(1)ஐ வாசிக்கும் போது புலப்படுவது என்னவென்றால் அது ஜனாதிபதிக்கே உரியது.

 

ஜனாதிபதி அநுரகுமார பிடிவாதம் - முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் அரசை விரட்டும் பாரிய போராட்டம்! கஸ்ஸப பிக்குவின் ஆவேச பேச்சு | Anura Kumara Dissanayake Balangoda Kassapa

ஞானசார தேரர் அனுபவிக்கும் வேதனையை, சிறைக்குச் சென்ற தேரர்களாக நாங்கள் அறிவோம்.அவர் தனிப்பட்ட விடயங்களைப் பற்றி பேசவில்லை.

நாடு, இனம், பௌத்த சாசனம் பற்றியே பேசியுள்ளார். மாலை 5 மணிக்கு சிறைச்சாலை மூடப்பட்டால், மீண்டும் மறுநாள் காலை 5 மணிக்கே திறப்பார்கள். கழிவறைக்குச் செல்ல வழியில்லை.

உறங்குவது சிமெண்ட் தரையில் என பல சோதனைகளை அனுபவிக்கிறார். எமது நோக்கம் ஞானசார தேரரை நிபந்தனையன்றி விடுவிப்பதாகும். அரசாங்கம் வேறு ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் அவர்களைத் துரத்த வந்திருக்கிறோம் என்று.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *