சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உரத்த குரலில் ஞானசார தேரர் கூறிய விடயம்..

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை இந்நாட்டின் பௌத்த பிக்குகளுக்கு நல்லதொரு பாடமாகும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் உரத்த குரலில் விமர்சித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில், தன் மீதான சிறைத் தண்டனை குறித்து கலகொடஅத்தே ஞானசார தேரர் காரசாரமானக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
‘நாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் இதையொரு நல்ல பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.இங்கு அனைவரும் தத்தமது வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் நாட்டின் நன்மைக்காகவே இந்தச் தியாகங்களைச் செய்தேன்.என்னைச் சிறையில் அடைத்துவிட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
உண்மையைப் பேசுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா? நாங்கள் பிறரின் அன்னதானத்தை உண்டு நாட்டின் நலனுக்காகவே இந்தத் தியாகங்களைச் செய்தோம்.நாங்கள் யாருக்கும் கடனுமில்லை, எவருக்கும் பயமுமில்லை’ என்று உரத்த குரலில் முழங்கியுள்ளார்.
அதனையடுத்து சிறைச்சாலை வாகனத்தில் அவர் வெலிக்கடை சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்துக்கு விசேட அதிரடிப்படையின் வாகனப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
![]()