எப்.சி.ஐ.டி.முன் ஆஜராகத் தவறினால்; விமான நிலையத்தில் ஷிராந்தி கைதாவார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்குள், பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (எப்.சி.ஐ.டி.) முன் ஆஜராகத் தவறினால், அவர் கைது செய்யப்படலாம் எனவும் அவருக்குப் பயணத் தடை கோரப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவித்தது.
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த திருமதி ராஜபக்ஷ, தான் தலைமை தாங்கிய ‘சிரிலியா’ அறக்கட்டளை தொடர்பாக எப்.சி.ஐ.டி.யிடம் வாக்குமூலம் அளிக்க 14 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார். அவர் உரிய நேரத்தில் ஆஜராகத் தவறினால், பொலிஸ் பயணத் தடை கோரும் என்று அமைச்சக வட்டாரம் தெரிவித்தது. இதன் விளைவாக, விமான நிலையத்திற்கு வந்தவுடன் அவர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருமதி ராஜபக்ச செப்டம்பர் 16 அன்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். செப்டம்பர் 24 அன்று அவர் எப்.சி.ஐ.டி.யில் ஆஜராக வேண்டும் என்று விமான நிலையத்தில் எப்.சி.ஐ.டி. அதிகாரிகள் அவருக்கு ஓர் அறிவிப்பை வழங்கினர்.
இருப்பினும், அவர் திரும்புவதற்கான உத்தேச திகதி ஒன்று வழங்கப்பட்டிருந்தாலும், திருமதி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருப்பதால், அவர் திரும்பும் திகதி மருத்துவத் தேவைகளைப் பொறுத்தே அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
![]()