இலங்கை

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் இன்று; தமிழ் மக்கள் கூட்டணியின் இரு உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு யாழ். பொலிஸார் அழைப்பு

தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை விவகாரம் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களிடம் வாக்குமூலம் சேகரிக்க யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ஆகிய இரண்டு உறுப்பினர்களிடமே இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியால்   அனுப்பபட்ட தனிச் சிங்கள மொழி மூலமான குறித்த கடிதத்தில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாணம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின்படி,

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பகுதியில் இராசையா பார்த்திபன் எனப்படும் திலீபனின் புதிய திருவுருவச் சிலையை நிறுவுவது தொடர்பாக, அதற்குரிய வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, 05.10.2026 அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர் – என்றுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *