இலங்கை

இலங்கை, பாகிஸ்தானுக் கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாகிஸ்தானுடன் இலங்கை மூலோபாய மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள மூலோபாய கற்கைகளுக்கான நிறுவகம் (ISSI) மற்றும் தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (SASSRI) ஆகியவற்றிற்கு இடையிலான இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கடந்த 28ஆம்திகதி மெய்நிகர் முறையில் கையெழுத்திடப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான கல்விசார் ஆராய்ச்சி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் இந்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் முன்னிலையில் நடைபெற்றது.

இஸ்லாமாபாத்தில் உள்ள மூலோபாய கற்கைகளுக்கான நிறுவகத்தில், பாகிஸ்தான் தூதரகத்தின் பிரதித் தலைவர் கிறிஸ்டி ரூபன் உடனிருந்தார்.

தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் வழக்கமான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்கு இந்தக் கூட்டாண்மையைப் பயன்படுத்திக் கொள்வதில் இரு நிறுவனங்களும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.

முறையான கையெழுத்திடல் நிகழ்வைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் எதிர்கால கூட்டுத் திட்டங்கள், பொதுக் கருத்தரங்குகள் மற்றும் வெளியீட்டு ஒத்துழைப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் மற்றும்இலங்கை இடையே வலுவான நிறுவன, கல்வி மற்றும் சமூக-பொருளாதாரத் தொடர்புகளை வளர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த உடன்பாடு பாகிஸ்தான் மற்றும் இலங்கைஇடையிலான ஆழமான வரலாற்று மற்றும் இராஜதந்திர உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர், குறிப்பிட்டுள்ளார்.

அறிவுசார் கலந்துரையாடல்கள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கொள்கை உள்ளீடுகள் மூலம் சமகால பிராந்திய சவால்களை எதிர்கொள்வதில், முன்னணி ஆராய்ச்சி மையங்களுக்கு இடையிலான நிறுவன ரீதியான கூட்டாண்மைகள் முக்கிய பங்காற்றும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *