மகிந்த குடும்பத்திற்கு தொடரும் ஆபத்து! மற்றுமொரு மோசடியில் நாமல், யோசித

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரின் மற்மொரு மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இருவரின் முழுமையான அதிகாரங்களுடன் செயற்பட்ட தாருனயன்ட்ட ஹெட்டக் அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நன்கொடைகள் அடங்கிய கொள்கலன்கள் பரிசோதனைகள் ஏதுமின்றி துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த ஊடகவியலாளர் லசந்த ரூஹுனகே எழுதியுள்ள Rajapaksha Company என்ற நூலின் மூலமே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இரகசிய கொள்கலன்கள் கடத்தல்
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட தாருனயன்ட்ட ஹெட்டக் என்ற அமைப்பின் பதிவு செய்யப்பட்ட முகவரியாக பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தலைவராக நாமல் ராஜபக்சவும், உப தலைவராக யோசித ராஜபக்சவும் செயற்பட்டுள்ளனர்.
குறித்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய தாருனயன்ட்ட ஹெட்டக் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட Youth TV போன்ற திட்டங்களுக்கும் மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நன்கொடைகளுக்கும் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் வசதி இருந்தது.
எனினும், அந்த அமைப்பின் பெயரில் வந்த கொள்கலன்களை இரகசியமாகத் துறைமுகத்திலிருந்து வெளியேற்ற முயன்றமை தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த இரகசிய கொள்கலன்கள் கடத்தல் மற்றும் அது தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய தொடர் கட்டுரைகள் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 மற்றும் 24 ஆகிய திகதிகளில் பிரபல சிங்கள பத்திரிகையிலும் வெளியிடப்பட்டிருந்ததாக Rajapaksha Company நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()