இலங்கை

சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி FCID க்கு கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை கோரியுள்ளார்.

அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் கடிதம் மூலம் அப்பிரிவுக்கு இதனை அறியப்படுத்தியுள்ளார்.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதால் இச்சமயத்தில் அப்பிரிவில் ஆஜராகுவதற்கான வாய்ப்பில்லை எனவும், நாடு திரும்பியவுடன் அதில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக  (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *