முச்சந்தி

போதைப்பொருள் கடதல் – தெஹிவளையைச் சேர்ந்த வர்த்தகருக்கு மரண தண்டனை விதிப்பு

ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மே 17, 2017 அன்று அனவிலுந்தாவப் பகுதியில் சிலாபம் பிரிவு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இச்சோதனையின்போது மொத்தம் 211 கிலோகிராம் மற்றும் 818 கிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் பெறப்பட்ட அரச பகுப்பாய்வாளர் அறிக்கையின்படி, அப்போதைப்பொருள் தொகுதியில் 136 கிலோகிராம் மற்றும் 99 கிராம் தூய ஹெராயின் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இப்போதைப்பொருள் தொகுதி, 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் தனிநபர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட அதிகூடிய போதைப் பொருள் தொகுதியாகும்.

இதன் சந்தை மதிப்பு சுமார் 1 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *