பலதும் பத்தும்

76 வயதிலும் குறையாத சுறுசுறுப்பு… பிரதமர் மோடியின் ஃபிட்னெஸ் ரகசியம் இது தான்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2026) தனது 76வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்படுவதற்குப் பின்னால், இருக்கும் முக்கிய காரணங்கள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் யோகா, பிராணாயாமம், தியானம் மற்றும் நடைப்பயிற்சி போன்றவை  இவரின் இளமை தோற்றத்துக்கும், சுறுசுறுப்புக்கும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

76 வயதிலும் இளைஞர் போல சுறுசுறுப்பு! பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சீக்ரெட்! –  Dinasuvadu

பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி பழக்கங்கள்

அவரது அன்றாடப் பயிற்சிகளில் சூரிய நமஸ்காரம் முக்கியமானது. உடலின் பல தசைகளை ஒரே நேரத்தில் இயக்குவதுடன், உடலின் நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்தும் பயிற்சியாக இது கருதப்படுகிறது.

அதேபோல், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியும் அவரது காலை நேர வழக்கத்தில் இடம்பெறுகிறது. இதனுடன் தியானத்தையும் அவர் தொடர்ந்து மேற்கொள்கிறார்.

76 வயதிலும் குறையாத சுறுசுறுப்பு… பிரதமர் மோடியின் ஃபிட்னெஸ் ரகசியம் இது தான்! | How Does Pm Modi Stay Fit At 76 His Daily Routine

 

யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல், உடல் மற்றும் மனநலத்துடன் தொடர்புடைய வாழ்க்கை முறையாகவே அவர் அணுகுவதாகக் கூறப்படுகிறது.

இயற்கையோடு இணைந்து உடற்பயிற்சி செய்வதிலும் மோடிக்கு ஆர்வம் உள்ளது. வெறுங்காலில் நடப்பது குறித்து அவர், பஞ்சபூதங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் ஒரு வழியாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

76 வயதிலும் குறையாத சுறுசுறுப்பு… பிரதமர் மோடியின் ஃபிட்னெஸ் ரகசியம் இது தான்! | How Does Pm Modi Stay Fit At 76 His Daily Routine

 

மேலும், புல்தரையில் வெறுங்காலில் யோகாசனங்கள் செய்வதையும் தனது வழக்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மோடி அதிகாலை சுமார் 4 மணியளவில் தனது நாளைத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் தியானம், பிராணாயாமம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளுடன் புத்தக வாசிப்பிலும் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், அவரது ஃபிட்னெஸ் வழக்கத்தின் முக்கிய அம்சம் தொடர்ச்சியான பயிற்சி என்பதே.

76 வயதிலும் குறையாத சுறுசுறுப்பு… பிரதமர் மோடியின் ஃபிட்னெஸ் ரகசியம் இது தான்! | How Does Pm Modi Stay Fit At 76 His Daily Routine

யோகா, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றுக்கு விலையுயர்ந்த உபகரணங்களோ, ஜிம் உறுப்பினர் கட்டணமோ அவசியமில்லை. தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எளிய வாழ்க்கைமுறையே ஆரோக்கியத்துக்கு அடித்தளமாக இருக்க முடியும் என்பதையே அவரது வாழ்க்கை முறை பழக்கங்கள் எமக்கு உணர்த்துகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *