பலதும் பத்தும்

100 வயதைச் அசால்ட்டாகக் கடக்கும் ஜப்பானியர்கள்

உலகில் நீண்ட ஆயுள் காலம் கொண்ட நாடாக உள்ள ஜப்பானில் முதல் முறையாக 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்து உள்ளது.

இம்மாத நிலவரப்படி, 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 56-வது ஆண்டாக அதிகரித்து 1,07,677-யை எட்டியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட சுமார் 8 ஆயிரம் அதிகம் என்று சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சு தெரிவித்தது.

இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில், கியோட்டோவைச் சேர்ந்த 114 வயது பூயோ கிஷிமோட்டோ, குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயது ஹிகாரு கட்டோ ஆகியோரும் அடங்குவர் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. அங்கு பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் 100 வயதுப் பிரிவில் மட்டும் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஆரோக்கியமான உணவு முறைகள், மேம்பட்ட சுகாதார அமைப்பு ஆகியவை ஜப்பான் மக்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *