பலதும் பத்தும்

தலைமுடிக்கு ஏற்ற வகையில் எண்ணெயை எப்படி தெரிவு செய்ய வேண்டும் தெரியுமா?

ஆண்,பெண் ஆகிய இரு பாலருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரும் பிரச்சினை தலைமுடிப் பிரச்சினையாகும்.

இதற்கு மிக முக்கிய காரணம், எமது தலைமுடியின் தன்மைக்கேற்ற சரியான எண்ணெயைத் தேர்வு செய்யாமல் தலைமுடியைப் பராமரிப்பதாகும்.

ஆகவே, எமது தலைமுடியின் தன்மையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும், அதற்கான சரியான எண்ணெய் எது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

முதலில் அரைவாசி நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குவளையொன்றினுள் எமது தலைமுடி ஒன்றை இட்டு 5 நிமிடங்கள் காத்திருந்தால் எமது முடியின் தன்மையை இலகுவாகக் கண்டறியலாம்.

5 நிமிடங்களின் பின் தலைமுடியானது நீரின் மேற்பகுதியில் மிதக்குமாயின், அது குறைந்த நுண்துளைத் தன்மை கொண்ட(Low porosity hair) முடியாகும். ஆகவே, இதற்கு Avocado எண்ணெய் மற்றும் Organ எண்ணெயைப் பயன்படுத்துவது சிறப்பானதாகும்.

நீரின் அடிப்பகுதி வரை தலைமுடி மூழ்குமாயின் உங்கள் முடி அதிக நுண்துளைத் தன்மை கொண்ட(High porosity hair) முடியாகும். இதற்கு அடர்த்தியான தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்ததாகும்.

தலைமுடியானது நீரின் மேற்பகுதியில் மிதக்காமலும் அடியில் மூழ்காமலும் நடுப்பகுதியில் இருக்குமாயின் அது மிதமான நுண்துளைத் தன்மை கொண்ட(Medium porosity hair) முடியாகும். இது மிகவும் ஆரோக்கியமான தலைமுடி வகையாகும். இதற்கு கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ரோஸ் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லதாகும்.

எனவே, எமது முடியின் தன்மைக்கேற்ற சரியான எண்ணெயைப் பயன்படுத்தினால் தலைமுடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *