ஏ ஐ .கட்டுப்படுத்துமாறு வீதியில் இறங்கிப் போராடிய ரோபோக்கள்!

போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமெழுப்பியவாறு ரோபோ மனிதர்கள், நாய் வடிவ ரோபோக்கள் கையில் கொடிகளைப் பிடித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளன.
செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்த வேண்டும், அதன் பயன்பாடு குறித்த கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ரோபோக்களே போராடுகின்றன என்ற செய்தியைப் பார்க்கும்போது சற்று குழப்பம் நேரிடலாம். ஆனால் அது உண்மைதான். போலந்து நாட்டில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 30 ரோபோக்கள் போலந்து நாட்டின் வர்சா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டன.
ரோபோக்கள் மூலம், மனிதர்களின் வேலையை தானியங்கி முறையில் செய்து, மனிதர்களின் வேலையைப் பறிக்கும் நிலை அசுர வேகத்தில் நடந்தேறி வரும் நிலையில், அதனை எதிர்த்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்றழைக்கப்படும் ஒரு தன்னார்வ அமைப்பால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் ரோபோக்கள் கைகளில் கொடிகளை வைத்துக் கொண்டு, வட்டமாக சுற்றி சுற்றி நடந்து, ஒலிபெருக்கிகள் மூலம் முழக்கங்களை எழுப்பின.
பொதுவாக மனிதர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளலாம். ஆனால் யார் கேட்பது, யார் பார்ப்பது, அதுவே, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோக்கள் போராடினால் என்று மாற்றி யோசித்ததே இந்த போராட்டத்துக்கான காரணம் என ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும், தொழிற்சாலைகளில் கோலோச்சுவதால் மனித வளம் எவ்வாறு பாதிக்கிறது என்பது ஏதோ எதிர்காலத்தில் நடக்கப்போவது அல்ல, ஏற்கனவே தொடங்கி விட்டது, அது ஒரு கொடுங்கனவு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
இந்தப் பாராட்டத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் மனித ரோபோக்கள் அகிபோட் ஏ3 வகைகளும் இரு கால்களுடன் நடக்கும் மனித உருவ ரோபோக்கள் முதல் நாய் போன்ற நான்கு கால் ரோபோக்கள் வரையிலான பல்வேறு வகையான ரோபோ மனிதர்கள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளன.
அவைகள்,, பணியிடங்களைப் பாதுகாப்போம், விதிமுறைகளை வகுக்க வேண்டிய நேரம் இது, காத்திருக்க வேண்டாம், ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்துங்கள் போன்ற முழக்கங்கள் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக்கொண்டே ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருகின்றன.
இந்த போராட்டத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன
![]()