இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதிபதியா?

22 ஆவது திருத்தம் தொடர்பான தனது தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்னும் வழங்காத ஒரு சூழலில், ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அதற்கு விசேட பெரும்பான்மை இருந்தால் மாத்திரம் போதும் என்று கூறுவது எவ்வாறு ? தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி எவ்வாறு முன்கூட்டியே தீர்ப்பளிப்பது என எதிர்க்கட்சித்தலைவர் சஜிதன் பிரேமதாச கேள்வியெழுப்பினார்

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் கேள்வி எழுப்பிய அவர் மேலும்தெரிவிக்கையில்,

22 ஆவது திருத்தம் தொடர்பில் சமூகத்தில் பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. 20 ஆவது திருத்தம் குறித்து பேசும்போது, முன்னர் அநுர குமார திஸாநாயக்க , அதற்கு பாராளுமன்ற அனுமதி மாத்திரம் போதாது என்றும், சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்றும் கூறினார். ஆனால், அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில், சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலேயே நிறைவேற்றுவதாக குறிப்பிடுகிறார். 20 ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்று கூறும் ஜனாதிபதியே, 22 ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்று கூறுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீதிமன்றம் 22 ஆவது திருத்தம் தொடர்பான தனது தீர்ப்பை இன்னும் வழங்காத ஒரு சூழலில், ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அதற்கு விசேட பெரும்பான்மை இருந்தால் மாத்திரம் போதும் என்று கூறுவது எவ்வாறு என்பது பாரிய பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி எவ்வாறு முன்கூட்டியே தீர்ப்பளிப்பது என்பது குறித்து பிரச்சினை எழுகிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *