உலகம்

“பிரித்தானிய யூதர்களுக்கு ஒரு கருப்பு நாள்”

இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியா அறிவித்துள்ள தடைகள் “பிரித்தானிய யூதர்களுக்கு ஒரு கருப்பு நாள்” என Chief Rabbi Sir Ephraim Mirvis விமர்சித்துள்ளதுடன், “யூதர்களுக்கு எதிராக வெறுப்பை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு” இத்தடைகள் மேலும் துணிச்சலளிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

எனினும், தன்னை ஒரு “பெருமைமிக்க பிரித்தானிய யூதர்” என்று கூறிக்கொள்ளும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபேண்ட், Chief Rabbiயின் இந்த அறிக்கையுடன் தான் உடன்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“நான் பெரிதும் மதிக்கும் Chief Rabbi யின் கருத்துக்களுடன் நான் உடன்படவில்லை என்றே கூறுகிறேன்” என்றார்.

மேலும் “இஸ்ரேலிய அரசாங்கத்தின் செயல்களுக்கு பிரித்தானிய யூதர்களையோ அல்லது உலகெங்கிலும் உள்ள யூதர்களையோ பொறுப்பாக்கும் எவரும் யூத எதிர்ப்பில் (antisemitism) ஈடுபடுகிறார்கள் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்க விரும்புகிறேன்.

அதேநேரம், சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகிய பிரித்தானிய விழுமியங் களுக்காகவும், ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராகவும் நமது சமூகத்தில் குரல் கொடுக்க முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

Chief Rabbi யின் இந்த எச்சரிக்கை காரணமாக பிரித்தானிய யூதர்கள் தங்களின் பாதுகாப்பற்ற தன்மையை உணரக்கூடும் என எழுந்த கேள்விக்கு பதிலளித்த மிலிபேண்ட், “யூத எதிர்ப்புக் கருத்துக்கள் ஒரு தீமையாகும். நாட்டின் அனைத்து மதத்தவர்களும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் அதிரடிப் பதில் நடவடிக்கை

பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவித்த இந்தத் தடைகளுக்கு இஸ்ரேல் உடனடிப் பதில் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெருசலேமிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதுடன், 12 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் இஸ்ரேலுக்குள் நுழையவும் தடை விதித்துள்ளது.

அதேவேளை, பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா வர்த்தகப் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி எச்சரித்துள்ளார்.

எனினும், பிரித்தானியாவின் நடவடிக்கையை அமெரிக்கா பின்பற்றாது என்று தெரிவித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அதேநேரம் மேற்குக்கரையில் நிலையற்ற தன்மை ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *