நிகழ்வுகள்

பாரிசில் நான்கு நூல்கள் வெளியீடு

பிரான்ஸ், பாரிஸ் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஈழப் போரில் எழுத்தாயுதம், போர்க் களத்தின் பேனாக்கள், அரபு வசந்தம், உக்ரேனிய போரும் ஊடக திரிபும் ஆகிய நான்கு நூல்கள் வெளியீடு நாளை செப்டம்பர் மாதம் 5ம் திகதி சனிக்கிழமை (05/09/26) வெளியிடப்பட உள்ளன.

இந்நூல் வெளியீடு 57, Boulevard de Belleville, Paris-75011. மெட்ரோ: Couronnes (M2) / Belleville (M11)
எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1700 முதல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வு இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர் திரு.கே.பி. லோகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. பாரிசில் பல்வேறு தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில், இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button