முச்சந்தி

இலங்கையில் கடும் வறட்சி; 88 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 6 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 8,847 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 37,890 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 3,926 பதுளை மாவட்டத்தில் 8,383 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிவேகமாகக் குறைவடைந்துள்ளது.

இதனால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான குடும்பங்கள் குடிநீரைப் பெறுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகிக்கும் வேலைத்திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ மையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைக் போக்கும் வகையில், 27 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குப் குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

இதன்படி, 27,048 குடும்பங்களைச் சேர்ந்த 86,368 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button