இலங்கை

இந்த அரசின் “22” வெற்றிபெற்றால் இனி வரும் அரசுகளாலும் பெரும் ஆபத்து வரலாம்; உயர்நீதிமன்றத்தில் வாதம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் கட்டாயமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும். பாராளுமன்றத்திற்கு மாத்திரம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் வேறொரு அரசாங்கமும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இதே போன்று அதிகரிக்க முயற்சி செய்யலாம். இது மக்களின் இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத் தாக மாறலாம் என்று ஜனாதிபதி சட்டத் தரணி சாலிய பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத் திற்கான சட்டமூலம் தொடர்பான மனுக் கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் கள் குழாம் முன்னிலையில் ஆரம்பமான போது, அங்கு மனுதாரர்கள் சார்பில் ஆஜ ராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக் கையிலேயே சட்டத்தரணி சாலிய பீரிஸ் இவ்வாறு கூறினார்.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறை யீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்களின் ஒய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் கடந்த 18ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை சாவாலுக்கு உட்படுத்தி மனுக்களை தாக் கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் திங்கட்கிழமையுடன் நிறைவ டைந்ததை தொடர்ந்து, அந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரச்கள் குழாம் முன்னி லையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கி ழமை முதல் ஆரம்பமாகின.

இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத் துக்கொள்ளும் பணிகள் ஆரம்பமான போது. மனுக்களை பரிசீலிப்பதற்கு முழு நீதியரசர்கள் அடங்கிய குழாத்தை நியமிக் குமாறு மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெப்ரி அழக ரத்னம், எராஜ் சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெத்தேகொட, மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்தக் கோரிக்கை களை நீதிமன்றம் நிராகரித்து, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே அவற்றை ஆராய தீர்மானித்தது.

இதன்படி சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 67 மனுக்கள் ஆராயப்பட்டன. இரவு வரையில் 12 மணித் தியாலங்கள் முதலாம் நாளில் மனுக்கள் ஆராயப்பட்டன. இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட மனுதா ரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத் தரணி எம். ஏ. சுமந்திரன் தனது வாதங்களை முன்வைத்தார்.

அதன்போது அவர் தனது வாதங்களை முன்வைத்து கூறுகையில், பாராளுமன்றத் தில் அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியல மைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் உள்ள பல சரத்துக்கள் மீறப் படுகின்றன. குறிப்பாக 03 ஆவது சரத்து மீறப்படுகிறது. இவ்வாறானதொரு சந்தர்ப் பத்தில் அமைச்சரவை இச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பின் 03 மற்றும் 04 ஆவது சரத்துக்கள் மக்களின் இறையாண்மையுடன் நேரடியாகத் தொடர் புடையவை. அரசியலமைப்பின் 04 ஆவது சரத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்களும் 03 ஆவது சரத்தைப் பாதிக் கும். அரசியலமைப்பின் 04 ஆவது சரத்தின் மூலம் மக்களின் இறையாண்மை நிறை வேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஊடாகச் தொழிற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சர் விஜித ஹேரத்
எதிர்க்கட்சியில் இருந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகத் தனிநபர் பிரேரணை ஒன் றைக் கொண்டு வந்தார். ஆனால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென நீ திமன்றம் குறிப்பிட்டது. 2022 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் தொடர் பான தீர்ப்பில் சர்வஜன வாக்கெடுப்பு அவ சியமென நீதிமன்றம் அறிவித்தது. இதன் தீவிரத்தன்மை குறித்து சட்டத்தரணிகள் ச ங்கம் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இறுதியாக இந்த விடயம் குறித்து விவா திக்க சட்டத்தரணிகள் சங்கம் பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாயிற்று. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆறு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இரண்டு பிரதம நீதியரசர்கள் ஓய்வு பெற்ற னர். இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நீ தித்துறையின் சுயாதீனம் மீறப்படும் எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர், மனுதாரரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைக்கையில்,

நீதிபதிகள் சுதந்திரமாகத் தமது கட மைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் இருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் என்பதற்காக அந்தச் சுதந்திரத்திற்குத் தடை ஏற்படக் கூடாது. நீதிமன்றத்தின் முன் இவ்வாறான விடயங்களைச் சமர்ப்பிக்க நேரிட்டமை குறித்து நான் வருந்துகிறேன். நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப் பதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டியுள்ளது. உங்கள் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவே இது செய்யப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் இந்த வகையில் உங்களை அசௌகரியத் திற்கு உள்ளாக்கக் கூடாது. நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயதைக் குறைப்பதன் மூலம் மட்டுமன்றி, அதனை அதிகரிப்ப தன் மூலமும் நீதித்துறையின் சுயாதீனம் மீறப்படுகிறது. இலங்கை தென்னாசியா வின் பழமையான நாடுகளில் ஒன்றாகும்.

நமக்குச் சீனாவாகவோ அல்லது வியட்நா மாகவோ மாற வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டார்.

இதேவேளை மேலும் சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ச ாலிய பீரிஸ் தனது வாதத்தை முன்வைத்து கூறுகையில்,
முன்மொழியப்பட்டுள்ள அரசியல மைப்புத் திருத்தத்தின் மூலம் அரசியல மைப்பின் மூன்றாவது சரத்திற்குத் தாக்கம் ஏற்படுகிறது. இதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் பாதகமான தாக்கம் ஏற்படுகிறது. அதனைச் நடைமுறைப் படுத்துவதாயின் கட்டாயமாக சர்வஜன வாக்கெடுப்பிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், பாராளுமன்றத்திற்கு மாத்திரம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அனு மதி அளிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் வேறொரு அரசாங்கமும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இதே போன்று அதிகரிக்க முயற்சி செய்யலாம். அதேபோன்று நீதிபதிகளைப் பதவியிலி ருந்து நீக்கும் நடைமுறையையும் தமக்குத் தேவையானவாறு மாற்றியமைக்க அவர் கள் முயற்சி செய்யலாம். இது மக்களின் இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button