இலங்கை

12 ஆம் திகதி யாழில் அரசிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

யாழ்ப்பாணத்தில்,அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் கட்சிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் திங்கட்கிழமை (31) இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்க ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் பங்காளிகட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமசந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசாங்கம் பதவி ஏற்று2 வருடங்கள்கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுத லை, மாகாண சபை தேர்தல், புதிய அரசிய லமைப்பு, போன்ற விடயங்களைநிறைவேற் றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணைகொடுத்து வந்த அரசாங்கம் எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டிய தோடு, அரசாங்கத்திற்கு உணரத்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என் பதை மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளது.

அத்துடன் இப்போராட்டத்திற்கு தமிழ் கட் சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக் கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட் டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்
துள்ளார்கள்.

இந்த போராட்டமானது, ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப் பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவழங்கிய 600மில்லியன்ரூபாவை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற் கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.தேர்தல் காலத் தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்கு வோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எள்ளளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை ச ார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை %.30 மணியள வில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட் டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button