இலங்கை

ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த வழியில் செல்கிறார் அநுர; முன்னணி சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தங்களுக்குச் சாதகமான நண்பர்களை பிரதம நீதியரசர்களாகக் கொண்டுவந்தனர். அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்பதற்காக அதிபரின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தினால் சரியாகுமா?

என்று முன்னணி சோசலிசக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர் மலிங்கம் கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலை யத்தில் முன்னணி சோசலிசக் கட்சியின் ச ார்பில், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘என்ன இந்த 22ஆவது திருத்தச் சட்டம்? ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது?’எனும் தலைப்பிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோ கிக்கும் நடவடிக்கை புதன்கிழமை (02) நடைபெற்றது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் முனசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக் கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

‘உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67ஆக அதிகரிப்பதற்காக, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர் பான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது.

சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதனாலேயே இச்சட்டம் கொண்டுவ ரப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியினர் கூறு கின்றனர். ஆனால், மேல் நீதிமன்றங்களிலும் நீதவான் நீதிமன்றங்களிலும்தான் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என் பது சாதாரண மக்களுக்கே தெரியும்.

கடந்த காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது நண்பரான நெவில் சமரக்கோன் என்ற சட்டத்தரணியைப் பிரதம நீதியரசராக்கினார். சந்திரிகா ஜனாதிபதியானதும், சட்ட ஆலோ சகராக இருந்த மார்க் பெர்னாண்டோவை விடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மோசமாகப் பயன்படுத்திய தனது நண்பரான சரத் என். சில்வாவை பிரதம நீதியரசராக நியமித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், நீதியர சராக இருந்த சிரானி பண்டாரநாயக்க தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்பதால் அவ ரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமான ஒருவரைக் பிரதம நீதியரசராகக் கொண்டுவந்தார்கள். அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார் என்று தோன்றுகிறது.

நீதியரசர்களின் சேவைக் காலத்தை 2 ஆண்டு கள் நீடிப்பதால் நிலுவையில் உள்ளவழக்குகள் முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறுகின்றனர். பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை கூடி விட்டது என்பதற்காக அதிபரின் வயதை அதிக ரிப்பது சரியா? எனவே, புதிதாகக் கதைகளைச் சொல்ல வேண்டாம்.

இன்று ஒரு வழக்குத் தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வருவதற்கு 6 மாதங்கள் வரை ஆகின்றன. அதுவரை சந் தேக நபர்கள் விசாரணைக்க கைதிகளாகவே அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதனாலேயே வழக்கின் காலம் நீடிக்கின்றது. எனவே, அங் குள்ள ஆளணிப் பற்றாக்குறைகள் முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, நீதிமன்றங்களின் ஆளணி வளங்களை அதிகரிக்க வேண்டும் அல்லது புதிய நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். இவையே சட்டத்துறையில் செய்ய வேண்டிய உண்மையான சீர்திருத்தங்களாகும். அதை விடுத்து நீதியரசர்களின் வயதை 2 ஆண்டுகள் கூட்டுவது, நமக்கு இருக்கும் கொஞ்ச ஜனநா யக உரிமையையும் பறிக்கும் செயலாகும்.

2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வரும் வரைதங்களுக்குத் தேவையான ஒருவர் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்; அப்போதுதான் தங்களுக்குச்சாதகமான அரசியல் நகர்வுகளைச் செய்ய முடியும் என்பதற்காகவே இந்தச்சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருகின்றனர்.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர், ‘நாங்கள் இடதுசாரிகள்; கொள்ளையடிக்கப் பட்ட பணத்தை மீட்டுத் தருவோம், வெளி நாடுகளில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் எடுப்போம், அரச வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுச் செலுத்தாமல் ஏமாற்றி யவர்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியைக் கொள்ளையடித்த அர்ஜுன மகேந்திரனை சட்டையைப் பிடித்து இழுத்து வருவோம்’என் றெல்லாம் கூறினார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ‘போதைப்பொருள் கடத்துபவர்க ளைப் பிடிக்கின்றோம், திருடர்களைப் பிடிக் கின்றோம்’ என்று சாக்குப் போக்கு மட்டுமே கூறுகின்றனர்.

எனவே, நீதிக்கு புறம்பாக எந்தவொரு நட வடிக்கையை இந்த அரசு மேற்கொண்டாலும் மக்கள் அமைதியாக இருக்கும் வரை அதற்
கான தீர்வு கிடைக்காது. இந்த தவறான செயற் பாட்டிற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதற்காகவே முன்னணி சோசலி சக் கட்சியும், மக்கள் போராட்ட அமைப்பு களும் வீதியில் இறங்கி, அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையிலான துண்டுப் பிரசுர விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button