இலங்கை

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; முதல்வர் விஜய் அறிவிப்பு!

முந்தைய திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்தார்.

ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை முந்தைய எம்.கே. ஸ்டாலின் தலைமையிலான அரசு “மனிதாபிமானமற்ற” முறையில் நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் மாநிலச் சட்டமன்றத்தில் உரையாற்றிய விஜய், 2021 மே முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அவ்வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர்களில் பலர் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிராகப் போராடியவர்கள் (மாணவர்கள் உட்பட) மீதான வழக்குகளையும் விஜய் தலைமையிலான டிவிகே அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தியுள்ளது.

இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று சட்ட அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button