பலதும் பத்தும்

100 மீற்றரை 8.86 வினாடிகளில் கடந்த சீன ரோபோ

சீனாவில் நடைபெறும் மனித ரோபோ போட்டிகளில், 100 மீற்றர் பந்தயத்தை தியான்கொங் அல்ட்ரா ரோபோ வெறும் 8.86 செக்கன்களில் கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்களில் 100 மீற்றர் உலக சாதனையானது 2009-இல் ஜமைக்காவின் உசேன் போல்ட் ஓடிய 9.58 செக்கன்கள் ஆகும்.

இதே போட்டியின் தொடக்கத்தில் 9.39 செக்கன்களில் இலக்கை எட்டிய அல்ட்ரா, அரையிறுதிப் போட்டியில் தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்துள்ளது.

அல்ட்ரா, ரோபோக்களை நிறுத்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் வைக்கப்பட்டிருந்த தடிமனான மெத்தையில் பலமாக மோதி கீழே விழுந்தது. அந்த அதிர்ச்சிகர மோதலின் தாக்கத்தால் அதன் உடற்பகுதியில் திடீரென சிறிய அளவில் தீப்பற்றியது. மற்றொரு அரையிறுதியில் ஓடிய ஒரு ரோபோ, ஓடும் வழியிலேயே பாகங்கள் கழன்று கீழே விழுந்து நொறுங்கியது.

100 மீற்றர் ஓட்டம் மட்டுமின்றி, மனிதர்களின் மேலும் 3 உலக சாதனைகளைத் ரோபோக்கள் முறியடித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது:

400 மீற்றர் ஓட்டம்: 38.15 செக்கன்கள்

1,500 மீற்றர் ஓட்டம்: 2 நிமிடங்கள் 21.64 செக்கன்கள்

உயரம் தாண்டுதல்: 2.88 மீற்றர்

பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த ரோபோட்டிக்ஸ் திருவிழாவில் 666 அணிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கால்பந்து, நடனம், தொழில்சார் பணிகள் என 51 பிரிவுகளில் போட்டியிட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button