உலகம்

சொத்துக்களை மறைத்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது வழக்கு பதிவு செய்து பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது

சொத்துக்களை மறைத்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது வழக்கு பதிவு செய்து பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது. மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் (வயது 66). 2021-ம் ஆண்டு தொடங்கி 15 மாதங்களுக்கு அந்த நாட்டின் பிரதமராக இருந்தார்.

இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக சொத்துக்குவித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த நாட்டின் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராமல் ரூ.380 கோடி அளவில் இஸ்மாயில் சப்ரி சொத்து வைத்திருந்தது தெரிந்தது. இதில் ரூ.34.84 கோடி (1.47 கோடி ரிங்கிட்) ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் அடங்கும். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு கோலாலம்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.

இஸ்மாயில் சப்ரி யாகூப் குற்றமற்றவர் என்று வாதிட்ட நிலையில், அவருக்கு ரூ.71.10 லட்சம் (3 லட்சம் ரிங்கிட்) பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது. அடுத்த விசாரணை செப்டம்பர் 29-ந்தேதி நடைபெறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button