கட்டுரைகள்

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!…  தொடர்- 12….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இப்படி ஆன்மீக குளியலிலே இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்படி நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படும் முட்டை சாப்பிடுவதால் ஆயுள் கூடுமென்று வயிற்றுப் பிரச்சனைகளையும் வென்னீரில் குளித்து தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் வாங்க வேண்டுமா? வயதுபோன காலத்தில் சொந்தச் செலவில் சூனியம் வைக்க வேண்டுமா?

இதுபோன்ற எண்ணங்கள் தோன்றின. நன்றாக சுற்றிப் பார்ப்பதை விட்டு வீண் சோதனை அவசியமா என்ற எண்ணமும் தோன்றின. அதனால் ஹஹோன் போகலாமா வேண்டாமா? என்பதை சற்று தள்ளிப் போட்டேன். ஏனென்றால் மாதக்கணக்கில் இருந்தாலும் ஜப்பானில் சுற்றுலாவுக்கான ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.

ஆதலால் ஹஹோன் போகக்கூடாத இடம் என்று சொல்லி உங்கள் ஆர்வத்தைக் குறைக்கமாட்டேன். பார்க்கவேண்டிய மிகவும் சிறந்த இடங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. கைலாசமலை புனிதமான மலைதான். சிவனும் பார்வதியும் தியானம் செய்கின்ற அற்புதமான இடம். அதில் ஏறவேண்டுமானால் எல்லோராலும் முடியுமா?

இந்த இடத்தில் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். நினைத்துப் பார்க்க நீங்கள் காதலிக்க நேரமில்லை என்ற பழைய திரைப்படத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதிலொரு பாட்டு. காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை. வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை என்பதே அப்பாட்டு.

அப்பாட்டில் சில வரிகள் வரும். “பஞ்சு போல் நரைவிழுந்து பார்வையும் குழி விழுந்து இரண்டும் கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி” என்பதே அவ்வரிகள். அந்தமாதிரி நிலையில் கைலாசமலையில் ஏறமுடியுமா? ஏறிக்கொண்டிருக்கும் போதே இறைவனடி சேர்ந்து விடுவோம் இல்லையா?
இந்த இடத்தில் ஹஹோனை தள்ளிவைப்பது பற்ற சொன்னேன் அல்லவா அதன் காரணத்தை சொல்கிறேன்.

இயற்கை காட்சிகள் ஜப்பான் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன. எனக்கு ஒவ்வொரு மணிநேரமும் அவசியம். ஆதலால் எதெல்லாம் மிக அவசியம் என்பதை தீர்மானித்திருந்தேன். இவற்றுள் மவுண்ட் ப்யூஜி தரிசணம் அவசியம்.
அதை புல்லட் ரயிலில் போகும்போதும் நோகாமல் நோம்பிருந்தபடி பார்க்கலாம். பகவானின் பால் அபிசேகத்தை படியேறி முட்டிநோக சென்றும் பார்க்கலாம்.

அல்லது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சிப் பெட்டியில் சருகண்டி சருகண்டி என்ற தொந்தரவு இல்லலாமல் பக்கோடா சாப்பிட்டபடியும் பார்க்கலாம். பக்கோடா சாப்பிட்டபடி பகவானை பார்த்தால் கோபப்படுவரா? அல்லது சொர்கத்தில் நமக்காக முன்பதிவு செய்திருந்த இடத்தை கான்சல் பண்ணிவிடுவாரா?

இப்படியெல்லாம் பல எண்ண ஓட்டங்கள் மனதில் எழ புல்லட் ரயிலில் போகும்போதே மவுண்ட் ப்யூஜியை பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அண்ணாமலயார் தரிசனம் கிடைக்காவிட்டால் கைலாசமலையில் ஏறலாம் என்றும் முடிவு செய்தேன். முருகனுக்கு காவடி எடுக்கவேண்டும் அவ்வளவுதான். பால்காவடி எனுத்தால் என்ன? பறவைக் காவடி எடுத்தால் என்ன?

அடுத்ததாக ஒசாகாவில் இருந்து டோக்கியோ செல்வதுதான் என் பயணம். ஒசாகவில் பார்க்க முடியாமல் போன செர்ரி ப்ளாசம் என்று சொல்லப்படும் மலர்ச்செரிவை பார்க்கலாம். மவுண்ட் ப்யூஜியை பார்ப்பதற்காக புல்லட் ட்ரெயினில் இருக்கைகளை பதிவு செய்தேன். மவுண்ட் ப்யூஜியைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்காக குறிப்பிட்ட இருக்கைகளை முன்பதிவு செய்ய வேண்டும்.

டொகைடோ ஷின்கன்ஷன் (புல்லட் ட்ரெயின்) நஷோமியில்(அதி வேகம் செல்லும் புல்லட் ட்ரெயின்) இருக்கைகளை பதிவு செய்ய வேண்டும். ஒசாகாவில் இருந்து செல்லும்போது இடது புறம் மவுண்ட் ப்யூஜி வருவதால் இடது புற இருக்கைகளை க்ரீன் காரில் (ரயில் பெட்டி) D மற்றும் C இருக்கைகளை பதிவு செய்திருந்தோம்.

இந்த இருக்கைகள் கிடைப்பது கடினம் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்து விட்டோம். தங்கியிருந்த இடத்தில் இருந்து புறப்பட்டு ஷின்-ஒசாக ஸ்டேஷன் வந்து குறிப்பிட்ட புல்லட் ட்ரெயினில் அமர்ந்தோம். ஏற்கனவே சீனாவில் புல்லட் டரெயினில் பயணித்திருந்த போதும் ஜப்பானில் புல்லட் ட்ரெயினில் பயணித்தது மாறுபட்ட புது அனுபவத்தைத் தந்தது.

ஒசாகாவின் ஷின்-ஒசாகா ரயில் நிலையத்தில் இருந்து 497 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் இருக்கும் டோக்கியோவை இரண்டு மணி பதுனாறு நிமிடங்களில் புல்லட் ரயில் சென்றடையிறது. பகல் பத்து மணிக்கு புறப்பட்ட ரயில் ஒரு வினாடியும் தாமதிதின்றி டோக்கியோவை சென்றடைந்தது. சில வினாடிகள் தாமதமானால் பணியில் இருந்த ஓட்டுனர் அதற்குண்டான சரியான காரணத்தே கூறிய பின்னரே அடுத்த கட்ட பணிக்கு அனுமதிக்கப் படுகிறார்.

ரயிலில் ஏறியதிலிருந்து ரயில்புறப்பட்டதும் ஓட்டுனர் நிகழ்த்தக்கூடிய ஒவ்வொரு நிகழ்வையும் சைகை மூலம் நிகழ்த்த அவரது ஒவ்வொரு அசைவும் பதிவாகிறது. ஓட்டுனர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்போது பாதுகாப்பை கண்காணிப்பது புப்படும் நேரம் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போன்றவற்று சைகை மூலம் நிகழ்த்துகிறார்.

அவ்வாறே அடுத்த ரயில் நிலையத்தை நெருங்கும் நேரம் ரயில் நிலையம் சென்றடைந்த நேரம் நின்ற நேரம் மூண்டும் பாதுகாப்பை கண்காணித்து புறப்படும் நேரம் என்று ஒவ்வொரு ரயில் நிலயத்திலும் ஒரு ரோபோ போலவே செயல்படுவதால் ஒரு வினாடி கூட தாமதமின்றி அவர்களது இலக்கை அடையமுடிகிறது. நேரம் மற்றும் பாதுகாப்பில் “ஜீரோ டாலரன்ஸ்” கடைப்பிடிக்கப்படுவதால் தாமதமோ விபத்தோ ஏற்படாமல் இருக்க முடிகிறது.

ஒசாகாவிலிருந்து புறப்பட்ட ரயில் சரியாக ஒரு மணி நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு ஷிஸுவோகா ரயில் நிலையத்தை கடந்து ஷின் ப்யூஜி ரயில் நிலையம் வருவதற்குள் மவைண்ட் ப்யூஜியைக் காண தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏழுமலையானைத் தரிசிக்க அளவுக்கு அதிகமான கூட்டம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பணியாளர்கள் திணறுகிறார்கள்.

பக்தர்களின் பக்திப் பரவசத்தால் அவர்களை விட்டால் நாள் முழுதும் கூட மெய் மறந்து நின்று பகவான்னோடு ஐக்கியம் ஆகிவிடுவதால் மட்டுமே சருகண்டி சருகண்டி என்று பகவான் முன் நிற்கும் பக்தர்கள் சில நொடிகளில் இழுத்து விடப்படுகிறார்கள். அதுபோலத்தான் இங்கு புல்லட் ரயிலின் வேகம் இடையிடேயே வரும் சுரங்கப்பாதை மற்றும் கட்டிடங்கள் வருகின்றன.

இத்தனையையும் தாண்டி ஐந்திலிருந்து பத்து நிமிடத்துக்குள் மட்டுமே மவுண்ட் ப்யூஜியின் தரிசனம் கிடைக்கும். அந்த நேரத்திலும் மழை, மேக மூட்டம் மற்றும் திடீரென வானம் இருண்டுபோதல் போன்ற சருகண்டி சருகண்டி இல்லாவிட்டால் மட்டுமே ஏழுமலையான் தரிசனம் கிடைப்பதுபோல் இந்த மவுண்ட் ப்யூஜியின் தரிசனம். கிடைக்கும். இப்போது மாடசாமி அண்ணாச்சி என்னிடம் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டார்.

(தொடரும்….)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button