பலதும் பத்தும்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் சட்டக் கல்லூரி மாணவி

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி காஸியா லிஸ் மெஜோ பட்டம் வென்றுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவியாகவும், மொடலாகவும் இருந்து வந்த காஸியா, கடந்த ஞாயிறன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற 52 இறுதிப் போட்டியாளர்களை வென்று இவர் மகுடம் சூடினார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் பியூட்டோ ரிக்காவில் நடைபெறும் 75 ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் இவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (a)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button