யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்; வெளியிடங்களிலிருந்து பஸ்களில் அழைத்து வரைப்பட்டோர் பங்கேற்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால்(ஓ.எம்.பி.) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட பெருமளவானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றது.
![]()