இலங்கை

விகாரைகள், இராணுவ முகாம்களில் புதைகுழிகளிருந்தால் விசாரணை நடத்தலாம்

விகாரைகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் மக்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக எவராவது கூறுவராக இருந்தால் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தால் முறைப்பாட்டை செய்ய முடியும் என்றும், அதன்படி விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

விகாரைகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் மக்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் எம்.பியொருவர் கூறியுள்ளதாகவும் இந்தக் கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில்.

அவ்வாறான உரையை நான் கேட்கவில்லை. அவ்வாறு கூறியவர் யார் என்றும் தெரியாது. இதனை தேடியறிந்து பாராளுமன்றத்தில் பதில் வழங்குவோம். அவ்வாறு இருக்குமாக இருந்தால் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் கதைதத்துக்கொண்டிருக்காமல் முறையிடுவதே சிறந்தது. வேண்டுமென்றால் நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்து விசாரணை நடத்துமாறு கூறலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button