தங்கம் வென்ற சீன மனித வடிவ ரோபோ

மனித வடிவ ரோபோகளுக்கு நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் சீன ரோபோ தங்கம் வென்றது.
சீனாவின் ரோபோ
பீஜிங்கில் நடைபெற்ற 2வது உலக மனித வடிவ ரோபோ விளையாட்டுப் போட்டியில் (World Humanoid Robot Games) சீனாவின் Tien Kung Ultra எனும் ரோபோ 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றது.
இந்த போட்டியில், Tien Kung Ultra ரோபோ 38.15 விநாடிகளில் ஓட்டத்தை முடித்தது.
Tien Kung Ultra
400 மீட்டர் இறுதிப் போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்றன. Honor Shuangchi, Jinghong Power, Zhuifeng Zaizai ஆகிய அணிகள் “Honor Lightning” ரோபோவை பயன்படுத்தின.
ஆனால் Tien Kung அணி, தங்களது Ultra ரோபோவை பயன்படுத்தியது. இறுதியில், Tien Kung Ultra ரோபோ முதலிடம் பிடித்தது.
Zhuifeng Zaizai அணி 39.45 விநாடிகளில் இரண்டாம் இடம், Jinghong Power அணி 39.66 விநாடிகளில் மூன்றாம் இடம், Honor Shuangchi அணி 40.08 விநாடிகளில் நான்காம் இடம் பெற்றன.
Usain Bolt சாதனையை முறியடித்த ரோபோ
அதே நிகழ்வில், Tianzhuo அணியின் ரோபோ 100 மீட்டர் ஓட்டத்தில் 9.39 விநாடிகளில் ஓடி, Usain Bolt வைத்திருந்த 9.58 விநாடி சாதனையை முறியடித்தது. ஆனால், ஓட்டம் முடிந்ததும் ரோபோ சமநிலை இழந்து சுவரில் மோதியது.
இந்த நிகழ்வு, மனித வடிவ ரோபோக்கள் விளையாட்டு துறையில் மனிதர்களை விட வேகமாக செயல்படக்கூடிய திறனை வெளிப்படுத்துகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, எதிர்காலத்தில் ரோபோக்கள் பல துறைகளில் மனிதர்களை மாற்றக்கூடிய நிலையை உருவாக்கும் என்பதையும் உணர்த்துகிறது.
![]()