பலதும் பத்தும்

ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய முள் இல்லாத மீன்

பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மீன் வகைகளை பற்றி பார்ப்போம். மிகவும் எளிதான தோற்றத்தில் மற்றும் நீளமான உடல் அமைப்பை கொண்ட ஒரு மீன் நமக்கு ஏற்படுகின்ற ரத்த சோகை ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கிறது.

இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள ஒரு ஆரோக்கியமான மீன்தான் செல்வ முரல் மீன். இது உருளை வடிவ உடலையும் கூர்மையான ஊசி போன்ற நீண்ட தாடகைளையும் கொண்ட ஒரு தனித்துவமான கடல் மீன் வகையாகும். இதனுடைய மேல் பகுதியில் பளபளப்பான சாம்பல் அல்லது நீல நிறத்திலும் அடிவயிற்று பகுதி வெள்ளி நிறத்திலும் காணப்படுகிறது.

ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய முள் இல்லாத மீன் | Best Fish For Anemic Patients To Eat

அந்த வகையில், இந்த மீன்களை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இந்த மீன்களை நாம் சாப்பிடுகின்ற பொழுது நம்முடைய உடல் திசுக்களை புதுப்பிக்கவும் தசை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு நமக்கு தேவையான உயர்தர புரோட்டீன்கள் இந்த மீனில் நிறைந்துள்ளது.

ஆதலால், வளரும் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த உணவாகும். அதே போல், இந்த மீன்களில் ஆரோக்கியமற்ற கெட்ட கொழுப்புகள் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மீனில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் நமக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கிறது. மேலும், இவை நம்முடைய நினைவாற்றலை அதிகரிப்பதோடு சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

வைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் நம்முடைய பற்கள் வலுவாக்குவதோடு எலும்பு தேய்மானம் மூட்டு வலி போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதோடு, இந்த மீனில் இருக்கக்கூடிய செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய முள் இல்லாத மீன் | Best Fish For Anemic Patients To Eat

 

இந்த செல்வ முரல் மீனின் சதை பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். ஆதலால், இவை எளிதில் ஜீரணம் ஆகிவிடும். செரிமான கோளாறு பிரச்சனைகள் உள்ளவர்கள் மூலநோய் உள்ளவர்கள் இந்த மீனை பயமின்றி எடுத்துக் கொள்ளலாம். அதைப்போல், சுவாச நோய் உள்ளவர்களும் முரல் மீனை அளவோடு சாப்பிடலாம்.

காரணம், இதில இருக்கக்கூடிய உயர் தர புரதம் உடல் வலிமை மற்றும் தசை பராமரிப்புக்கு உதவுகிறது. இருப்பினும் மீன் ஒவ்வாமை இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இந்த செல்வ முரல் மீனானது சுவையிலும் சிறந்தது. அதே நேரம், மிக குறைந்த முட்களையும் கொண்டுள்ளது. அதனால் குழந்தைகள் இதனை பயமின்றி சாப்பிடலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button