நீதிபதிகளின் ஓய்வு வயதை இரண்டு வருடங்கள் அதிகரிப்பதால் நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்கள் அதிகரிப்பதால் நாட்டிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் 55 வயதில் இராணுவப் தளபதியாக இருந்தபோது, அமெரிக்க இராணுவப் தளபதியின் வயது 70 ஆக இருந்தது. அந்த வயதிலும் அவர் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் சுமார் மூன்று மில்லியன் வீரர்களைக் கொண்ட பிரம்மாண்ட இராணுவத்தை வழிநடத்தினார். இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல. அதனால் நாட்டிற்கு எந்தவொரு தீமையும் ஏற்படாது.
இதேவேளை இந்தத் தீர்மானம் குறித்து சிலர் அச்சமடைவதானது, நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் தங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும் என்ற சந்தேகத்தினாலேயே ஆகும். இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையே தவிர நாட்டின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது மிகவும் நல்லதொரு தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()