இலங்கை

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு

தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தமது பதவிப் பொறுப்புகளை சட்டரீதியாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்கான வழிகாட்டலை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் சட்டங்களை இயற்றுவது,வருமானத்தை அதிகரிப்பது, மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திஅவற்றை நடைமுறைப்படுத்தும் விதம், சட்டரீதியான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,செயலாளர் எம்.எ.சுமந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான இராசாணக்கியன்,ப.சத்தியலிங்கம், மற்றும் வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உபதலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள்,மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவின் தலைவர் கோசலைமதன் ஆகியோர் தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button