இலங்கை வரலாற்றில் தண்டனைப் பெறப் போகும் முதலாவது முன்னாள் ஜனாதிபதி ரணிலாம்.. தப்பிப்பதற்கு பெரும் சதி!

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.
அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
![]()