ராஜபக்சமயமாகிய ஐக்கிய தேசியக்கட்சி! சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க

ஐக்கிய தேசியக்கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக்கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்த கருத்துகள்..,
ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று நான் இல்லை. ஆனால் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சி இப்போது உடைந்து சிதறிப்போயிருப்பது போல் தெரிகிறது.
எனவே, எனக்கு ஆரம்பத்திலிருந்தே இதில் விருப்பம் இல்லாத நபர் என்பதால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.
அதனால் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன்.
வேறு அரசியல் கட்சிக்குச் செல்லவும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். ராஜபக்சக்கள் அன்று ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இரண்டு காரணங்கள் வலுவடைந்திருந்தன.
அது தொடர்பில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்கள்
அனைவரிடமும் பேசி முடியாது என்று கூறிய பிறகு, இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடம் வந்தார்கள். அந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த சூழ்நிலையில், ராஜபக்ச குழுவினருக்கு அல்லது கோட்டாபய ராஜபக்ச ஓடிப்போன பிறகு ரணிலைத் தவிர வேறு புகலிடம் இருக்கவில்லை அவருக்கு அதை பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.
அவர் அதை பொறுப்பேற்றார். அவர் அந்த சவாலை எதிர்கொண்டார். அவர் இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் இருந்த சூழ்நிலையை முற்றிலும் மாற்றினார்.
வீழ்ச்சியை நோக்கி சென்ற பொருளாதாரத்தை 5.2 வீதமாக ஒரு வருடத்தில் மாற்றினார். அவருடன் தோளோடு தோள் நின்று நாங்கள் வேலை செய்தோம்.
அதற்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகராக அந்த ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்களை உருவாக்க நாங்கள் செயற்பட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.
![]()