இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மேலும் இரு மனுக்கள்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் அமைப்பும், ‘தினன தக்குன’ அமைப்பும் தாக்கல் செய்துள்ளன.

இதற்கமைய, இதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மொத்த மனுக்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button