இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18)  குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button