இலங்கை

வெளிநாட்டுப் பணியாளர்கள் வரிக்கு பயப்படத் தேவையில்லை

வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது வரிகள் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்கும் போதே உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் வரி நோக்கங்களுக்காக ஒருவர் வசிப்பிடவாசியாகக் (resident) கருதப்பட்டால், அந்த நபர் வெளிநாடுகளிலிருந்து ஈட்டும் வருமானமும் இலங்கையிலிருந்து ஈட்டும் வருமானமும் வரிக்கு உட்படும் என அவர் கூறினார்.

இருப்பினும், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு ஒருவர் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி தொடர்பில் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என ஹிரான் மெனேரிபிட்டிய வலியுறுத்தினார்.

வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும்போது, வங்கி அமைப்பின் ஊடாக அப்பணத்திற்காக தனியாக எந்தவொரு வரியும் அறவிடப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களால் சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்ட வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் நாட்டிற்கு அனுப்பி, அதைச் சட்டப்பூர்வமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வரிக்கு உட்படுவது, அவர்கள் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இருந்தால் மட்டுமே. அவ்வாறாயின், அவர்கள் வெளிநாட்டிலும் இலங்கையிலும் ஈட்டும் வருமானம் வரிக்கு உட்படும். ஆனால், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு அந்த வெளிநாட்டு ஊழியர் இலங்கையில் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது. எனவே, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி குறித்து பயப்படத் தேவையில்லை. பணத்தை அனுப்பும்போது வங்கி அமைப்பின் மூலம் அதற்காக எந்த வரியும் அறவிடப்படுவதில்லை. அதேபோல், அவர்கள் வெளிநாட்டில் சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்புவதன் மூலம், அது சட்டப்பூர்வமான வருமானம் என்பதை உரிய நிறுவனங்களுக்குத் தெரிவித்து அதை முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால் வரி குறித்து அச்சமடைந்து சட்டவிரோதமான வழிகளில் பணத்தை அனுப்புவது இதற்குத் தீர்வாகாது” எனக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button