இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்; பிரதமரின் மௌனம் ஏற்படுத்தியுள்ள சந்தேகம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காதது அரசியல் களத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக எதிரணி அரசியல் அவதானிகள் சுட்டுக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ஆனால் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவை அதற்குத் தூண்டியவர் அவரா என்ற சந்தேகம் பெலவத்தை தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெலவத்தையின் தலைவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்

தேசிய மக்கள் சக்தியிலிருந்து மாத்தறை மாவட்டத்திற்காகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவரும், ஜனாதிபதியின் நெருங்கிய சட்டத்தரணிகள் வட்டத்தில் உள்ளவருமான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும 22க்கு ஆதரவாகப் பேசாமல் இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்கு, தினசரி புலனாய்வு அறிக்கைகள் மூலம் இது தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: பிரதமரின் மௌனம் ஏற்படுத்தியுள்ள சந்தேகம்! | Harini Amarasuriya 22Nd Constitutional Amendment

எவ்வித அழுத்தத்தைப் பிரயோகித்தாவது எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு 22வது திருத்தத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிடச் செய்வதே இதற்குச் சிறந்த தீர்வாகும் என பெலவத்தை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு குறித்த அறிக்கையை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button