நாட்டை நாசப்படுத்திய ரணில் – மைத்திரி: பல தகவல்களை வெளியிட்ட முக்கிய புள்ளி

மைத்திரி – ரணி ஆட்சியில் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அவர்களின் குடும்ப சண்டையால் இழக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.
நேற்று (15.08.2026) தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
நான் கட்டாருக்கான இலங்கை தூதுவராக இருந்தபோது, கட்டார் மன்னரிடம் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. “மன்னரே, நமது நாட்டிற்கு வந்து நமது எண்ணெய் வளங்களை ஆய்வு செய்யுங்கள்” என்று கோரினேன்.
அன்றைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் மோதல்கள் நிலவியது. ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை ஒருவர் எதிர்த்தனர்.
மேலும் கட்டார் அரசு இலங்கையில் “கட்டார் சிட்டி” என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தொடங்க முயற்சித்தது. ஆனால், ரணில் – மைத்திரி மோதலால் அதுவும் கைநழுவிப் போனது. அது மட்டுமல்ல அன்றைய மத்திய மாகாணத்தின் பெண் ஆளுநரை நான் கட்டார் மன்னரிடம் அழைத்துச் சென்றேன்.

நுவரெலியாவில் ஒரு அழகிய ‘கேபிள் கார்’ (Cable Car) திட்டத்தைச் செயல்படுத்துமாறு அவர் யோசனை தெரிவித்தார். ஆனால், இவர்கள் இருவரின் சண்டையினால் அதுவும் நடக்காமல் போனது.இதனால் நாடு மேன்மேலும் பாதாளத்தை நோக்கி நகர்ந்தது.
எனவே, தற்போதைய ஜனாதிபதி உறுதியான, தனித்து தீர்மானம் எடுக்கக்கூடிய ஒரு நபர் என நான் நினைக்கிறேன். இன்று எதிர்க்கட்சி ஒன்றில்லை.
நமக்கு சுதந்திரம் கிடைத்து சுமார் 75 ஆண்டுகள் ஆகின்றன. பல ஜனாதிபதிகள் இந்நாட்டை ஆட்சி செய்தார்கள், ஆனால் நாளுக்கு நாள் நாட்டை நெருக்கடிக்கே தள்ளினார்கள்.
நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒரு தலைவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தோன்றியிருந்தால், இன்று நாமும் சிங்கப்பூரைப் போன்ற ஒரு நாடாக மாறியிருப்போம்.
அதனால் நான் நினைக்கிறேன், இவர் மிகவும் நன்றாக அரசு நிர்வாகத்தைச் செய்கிறார். இன்று ஊழல், மோசடி இல்லை. மாயாஜாலக்காரரைப் போல திடீரென இந்நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
நிச்சயமாக இந்த அரசு தான் இந்நாட்டை இன்னும் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்யும். நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பை எடுத்துக் கொண்டால் உதாரணமாக இங்கிலாந்தில் 75 வயது வரை நீதிபதிகளுக்கு பணியாற்ற முடியும்.
அமெரிக்காவில் வயதாகும் வரை செய்ய முடியும். அப்படியென்றால், ஏன் நம் நாட்டில் அப்படிச் செய்வதில் என்ன தவறு உள்ளது? என தெரிவித்திருந்தார்.
![]()