இலங்கை

செம்மணியில் இரவு பகலாக தொடரும் போராட்டம்; நீதிகோரி குரல் எழுப்பும் மக்கள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் ‘நீதியின் ஓலம் இரண்டு’ போராட்டம் (15) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் செம்மணிச் சந்தியில் இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் இந்தப் போராட்டம், எதிர்வரும் 17 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button