49 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் – அநுர ஆட்சியில் அதிசயம்

இலங்கை அரசியல் வரலாற்றில் 49 ஆண்டுகளின் பின்னர் அநுர அரசாங்கத்தில் துண்டுவிழும் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கடன் பெறாத காரணத்தால் கடந்தாண்டு ஆகக் கூடுதான ஆரம்ப நிலுவையை சாத்தியமாக்க முடிந்ததாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
துண்டுவிழும் தொகை
அரச ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் மொத்த தேசிய உற்பத்தி சார்ந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை 2.5 சதவீதம் வரை குறைக்க முடிந்ததாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை வலுவாக்கும் நோக்கத்துடன் மீண்டெழும் செலவினங்களையும் முதலீட்டு செலவினங்களையும் முறையாக நிர்வகித்ததன் மூலம் இத்தகைய கூடுதலான ஆரம்ப நிலுவை சாத்தியமானது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
![]()