உலகம்

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான அமெரிக்க ரீப்பர் ட்ரோன் ; காரணம் மர்மம்

கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அதிநவீன ‘MQ-9A ரீப்பர்’ ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்கான காரணம்

ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள சாபெல்லி விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த ட்ரோன் கீழே விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ட்ரோன் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட ஏதேனும் காரணத்தால் விபத்துக்குள்ளானதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button