உலகம்

சீனாவை சூறையாடிய டால்பின் புயல்; 1000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து

சீனாவில் டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, மேலும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஞாயிற்றுக்கிழமை சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கரையைக் கடந்த பின்னர் வலுவிழந்த புயலை அடுத்து, சீனாவின் தேசிய வானிலை மையம் (NMC) திங்கட்கிழமை காலை மிகக் குறைந்த தீவிரமான புயல் எச்சரிக்கையை விடுத்தது.

புயல் வலுவிழந்த போதிலும், கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதேசமயம் கிழக்கு மற்றும் தெற்கு ஜெஜியாங்கின் சில பகுதிகளுக்கு திங்களன்று அதிகாரிகள் தங்களின் மிகக் கடுமையான திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button