பலதும் பத்தும்

10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து!

பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் அதிர்ஷ்டப் பொருளாக வைத்திருந்தார்  என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

கடந்த 2006ஆம் ஆண்டு, பளவான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சிப்பிக்குள் சிக்கியிருந்த இந்தப் பிரம்மாண்ட முத்தை அந்த மீனவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அரிய தன்மையை அறியாத அவர், அதை தனக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் பொருளாக நம்பி, தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

Philippines : 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து! | Fisherman Found Giant 100 Million Pearl

உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து

இந்த அரிய முத்து சுமார் 2.2 அடி (67 செ.மீ) நீளம், 1 அடி (30 செ.மீ) அகலம் மற்றும் 34 கிலோ எடை கொண்டதாகும். இதன் அளவும் எடையும் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்றாக இதைத் தனித்துவமாக்குகின்றன.

இந்நிலையில், மீனவரின் வீடு தீ விபத்தில் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பொருளை அவர் பாதுகாப்பு கருதி உள்ளூர் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அது மிகவும் அரிய மற்றும் விலைமதிப்பற்ற இயற்கை முத்து என்பது தெரியவந்தது.

Philippines : 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து! | Fisherman Found Giant 100 Million Pearl

இந்த முத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 950 கோடி மதிப்புள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button